About me



I am Padmaraj Ramasamy, State bank of India (Retd), Mannargudi.

The valid reasons to travel the spot and write a document about the places indicated in  the travelogue …


* Named as RPRtravelogue ie in the name of my loved grandsons of Rishabh Prajeet Roshan travelogue.

But I had a personal  domain name of AhimsaiYatrai.com. So  anyone can visit the blog by both domain name.

My teacher told always that If any praise or greetings regarding our exposures should go to the Almighty. Likewise many people are behind to upload the travelogue, in the Google media. First I must thanks the Google for allot a room to store the data of rprtravelogue.blogspot.

My early age Grandpa, with a sandal dot forehead, holy thread cross and Panchakatcham dhothy wearing  inspired me for the holy service ; my mother always thinking of Jain temples and deities, my father, a poet and play-writer, always narrate the philosophies of Jainism on his way of thought. My wife also demands to travel along 108 Jain temples around us. All are the inspirations to create the travelogue. Also my loving heirs also supported for the blog to give assistances by Car, Camera, Laptop, travel kits and other accessories.

Our Jinakanchi mutt Battarack Shri Lakshmisena Swamyji order me to complete. My uncle Shri C.Appandairaj, Thanjai also give the tour programme for Tamil Nadu Jinalayas. Apart from that all Trustees, Upathyayars and natives of the Jinalaya village also cooperate me to take photographs and the historical points to be noted.

Then for Documentation beloved historical travel writers of Mylai Shri Venkatasamy Nattar, Shri Ekambaranathan, Shri R. Vijayan, Arni, Shri Anandhapuram Krishnamurthy are much helped with their travel research articles and books.

One more person I must tell here is my lovable i10 car gave full cooperation without any hesitation on riding. But he takes line share of our Puniyas because of carrying my wife and me.
Once again I thank to all those who helping on the project.

I may be more thankful those who are visit the holy spot frequent or one time visit while they are traveling along the way. Otherwise the treasures are deteriorated or demolished in due course.



Kindly lay your comments about the blog. Thank in anticipation.


*******************

பத்மராஜ் ராமசாமி, பாரத ஸ்டேட் வங்கி (ஓய்வு), மன்னார்குடி.

 இந்த பயணத் தகவல் மின் பதிவை தோற்று விப்பதற்கான காரணங்களை விளக்க முயலுகிறேன்.


.. எனது அன்பிற்குரிய பேர இளவல்கள் ரிஷப், பிரஜீத், ரோஷன் பெயரினை இணைத்து RPRtravelogue என்று பதிவிட்டுள்ளேன்...

ஆனால்  என்னிடத்தில் Ahimsaiyatrai.com  என்ற பெயரில் டொமைன் (மின்னணு களம்) இருந்ததால் அதற்கு இந்த இணையதளத்தை மாற்றியுள்ளேன். அதனால் இரண்டு பெயரிலும் இதனை திறவு செய்யலாம்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றுதான் எப்போதும் எடுத்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் கர்வம் கட்டுப்பாட்டில் இருக்கும் என எனது தமிழ் ஆசான் பள்ளிக்காலங்களில் குறிப்பிடுவார். அவ்வழியே நோக்குங்கால் அவ்வாலய தரிசனங்களின்  பின்னனியில் பலரும் உள்ளனர். அவர்களுக்கு தான் தங்களின் பாராட்டுதல்கள் சென்றடையும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.


அதில் சிலரை குறிப்பிடுகிறேன் (சுய புராணம் தான்). சிறிய வயதில் சந்தனத்திலகமும், பூணூலும், பஞ்சக்கச்சத்துடன் வாழ்ந்த எனது தாத்தாவும், பல ஆலயங்களையும் சென்று பார்ப்பதில் ஆர்வம் கொண்ட எனது அன்னையும், சமணத்தின் கருத்துக்களை எப்போதும் முத்தமிழில் வெளிப்படுத்தும் எனது தகப்பனாரும்,  வெளிமாநலங்களில் உள்ள ஜிநாலயங்கள் மட்டுமல்ல தமிழகத்தில் 108 ஜிநாலயமாவது பார்க்க விரும்பிய  எனது துணைவியாரும் மற்றும் மன்னைவாழ் பெரியோர்களும், நண்பர்கள், உறவினர்களும், மேலும் எனது வார்சுகள் அனைவரும் அப்பயணத்திட்டத்திற்காக  வாகனம் வாங்கித்தந்து, என்னை ஓட்டவும் அனுமதித்து, புகைப்படக்கருவி, மடிக்கணினி, மேலும் சில சாதனங்கள் அளித்து உதவியதால்  தான் எனது இந்த தாக்கத்திற்கான முதற்காரண கர்த்தாக்கள். நான் வெறும்  கருவியே, அதனால் உங்களின் அனைத்து அபிப்ராயங்களுக்கும் உரியவர்கள் அவர்களே என கூறிக் கொள்கிறேன்.


நான் பணி ஓய்வு பெற்றவுடன் எனக்கு கட்டளையிட்டு அனுப்பிவர் தவத்திரு. ஸ்ரீலஷ்மிசேன ஸ்வாமியார் அவர்கள்,  எவ்வழியே செல்ல வேண்டும் எந்த ஆலயங்களைக் காண வேண்டும் என்பதை ஒரு பட்டியல் போட்டு கொடுத்தவர் எனது உறவினர் தஞ்சை திரு. அப்பாண்டைராஜ் அவர்கள்ஆங்காங்கே ஆலயத்தை என்னை நம்பி திறந்து காட்டி பூஜைகள் செய்தும், விளக்கங்களையும் அளித்தும், உணவளித்தும் , அடுத்த ஸ்தலத்திற்கு செல்ல வழிகாட்டிய ஆலய முக்கியஸ்தர்கள், உயாத்தியாயர்கள், ஊர் பெரியோர்கள் அனைவரும்  உங்கள் பாராட்டுதல்களுக்கு உரியவர்களே.( இரண்டு இடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் யாதொரு தடங்களும் ஏற்படவே இல்லை.)


மேலும் நம் சமணத்தின் பால் பற்று கொண்ட பிற சமயத்தை சார்ந்த பல வழிகாட்டு நூலாசிரியர்கள் துணை கொண்டுதான் இந்த இணையப்பதிவின்  விபரங்கள் பூர்த்தியானது. அவர்களில் சில நூலாசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றியையும், உங்கள் அனைவரின் பாராட்டுக்களையும் அனுப்பி வைக்கிறேன். குறிப்பாக பல களப்பணிகளை மேற்கொண்ட மதிப்பிற்குரிய ஆசான்கள் மயிலை திரு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும், குடவாயில் திரு. பாலசுப்பிரமணியன் அவர்களும், திரு. ஏகாம்பரநாதன் அவர்களும், திரு. விஜயன், ஆரணி அவர்களும், திரு. அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும், திரு. ஜம்புலிங்கம் அவர்களும், திரு. தில்லை கோவிந்தராசன் அவர்களும் ஆவார்கள்.


மேலும் ஒருவருவரை நான் இந்நேரத்தில் குறிப்பிட்டே ஆக வேணடும்.  புதியவனானாலும் என்னை தன் மீது அமர்ந்து இயக்க அனுமதித்து, எங்களை அனைத்து ஸ்தலங்களுக்கும் அதிக சிரமங்கள் இல்லாமல், தன் கஷ்டங்களை எந்த ஒரு சமயத்திலும் வெளிப்படுத்தாத அவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன்  பட்டவன் தான். ஆனால் எங்களது எழுபது சதவீத புண்ணிய பலனையும் எடுத்துக் கொண்டவரும் அவரே. (அவர் வேறுயாருமல்ல எங்களது i10 கார் தான்).


மேலும் எனது ஒரு வேண்டுகோளையும் தங்கள் முன் வைக்கிறேன். அது வேறொன்றும் இல்லை, தாங்கள் அனைவரும் ஒருமுறை அவ்விடங்களுக்கு செல்ல வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் இந்த பதிவுகளை தெரிவிக்கிறேன். ஆதலால் ஆண்டுக்கொரு முறை அவ்விடங்களுக்கு பல குழுக்களாக சென்றுவந்தால் அப்பொக்கிஷங்களைப் பாதுகாக்கலாம். 

நம் காலத்தில் அச்சின்னங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம்  ஒப்படைப்பது நமது கடமையும் கூட.

உங்கள் விமர்சனங்களை எழுத வேண்டுகிறேன்.


நன்றிகள் பல.

                                                                ********************

27 comments:

  1. Thank you for this excellent website. You have made a valuable contribution to preserving and highlighting the Tamil Jain heritage. Every Tamil Jain temple has been photographed and documented by you in English and Tamil, this is truly an extraordinary accomplishment. Also, thank you for highlighting Jain temples outside of India. Please continue your great work. Please also get in touch with the many Tamil Jain groups on Facebook. Please popularize your website through those Tamil Jain groups on Facebook.

    ReplyDelete
  2. thank you sir for your detailed comments. since I cover all the remain places of Jain heritages.

    ReplyDelete
  3. Very well documented. May good karma bless you to visit more and more holy places!!!

    ReplyDelete
  4. It's really a great work.!! Its too useful to all our youngsters to know a detailed info about our jain heritage...

    ReplyDelete
  5. JAI JINENDRA !
    i like your great work, and immenced with happy in your fantastic information.
    thanks a lot.keep continue your updation to improve our knowledge and BAKTHI.

    A.JEEVENDIRAN.(RETIRED SENIOR MANAGER-LVB.) Nelliyankulam-Vandavasi

    ReplyDelete
  6. Jai Jinendra!!
    Salutations to your efforts in documenting valuable Jaina Heritage of Tamil Nadu and Highlighting to the world by this Webpage. Wish you have more strength in visiting, recording and posting the remaining Heritages also. This site was useful in compilation "Tamil Nadu Digamber Jain Temple Tour Guide" by me & Prof.N.K.Ajithadoss and published in Mahamastakabhisheka of Bhagawan Bahubali in Sravanabelagola on 16th feb 2018. Thanks, P.Rajendra Prasad Jain.

    ReplyDelete
  7. Sir
    Excellent guidance and more informative. Thank you sir for wonderful experience.

    ReplyDelete
  8. Jai jinendra !!

    Congratulations for a job well done! I was always confident of your abilities to shoulder your responsibilities.

    ReplyDelete
  9. அறநெறிசாரத்தின் கருத்துக்கள் எல்லா நூல்களுக்கும் அடிப்படை கருத்தாக இருக்கிறது

    ReplyDelete
  10. Wonderful initiative , Congratulations & Best Wishes.
    It will help our community.
    A.RAJAKUMAR JAIN
    MUTHALORE

    ReplyDelete
  11. NAMASKARAM, PLEASE HELP ME, I NEED KSHTRABALAKARKAL MANTRAMKAL IN TAMIL, KANNANSUBU21@GMAIL.COM

    ReplyDelete
  12. Great work, hats off to you for compiling such. Any particular reason Tamil Nadu has most number of Jain temples and out of which 90% plus is located in villupuram and Thiruvanamalai district?

    Also comunities around these temples should take responsibility of exploring the history of the temples and update in the site.

    When we click the picture to open and read it is showing error.

    ReplyDelete
  13. நன்றி ஐயா. தற்போது அந்தகுறைபாடு சரிசெய்யப்பட்டுள்ளது. தெரிவித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  14. ஐயா. வணக்கம்.
    நான் P.A.ஜினவிஜயன். தங்களின் பதிவுகள் அனைத்தும் திறம்பட மேன்மையானதாக உள்ளன.
    மிக்க நன்றி.
    சின்ன விண்ணப்பம் மந்திரங்களை எழுத்து மற்றும் ஆடியோவுடன் வெளிவந்தால் மேலும் மிக பயனுள்ளதாக அமையும்.
    நன்றி.

    ReplyDelete
  15. Sir.. Any link for Shikarji and Bihar Jain circuit... In RPRT that only missing. Waiting for JH & BH Jain temples info.

    ReplyDelete
    Replies
    1. Yes there you are. I have no digital camera during my visits on 1998 and 2013 trip towards eight states. My future plan to visit in near future.

      Delete
  16. நன்றி ஐயா.. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து தமிழுக்கு நல்ல நீதி நூல்களைத் தந்த சமண மதத்தின் ஆலயங்களுக்குச் சென்று பார்க்கும் ஆர்வத்தை தூண்டியமைக்கு நன்றி.

    ReplyDelete